யாழில் கடையை உடைத்து திருடிய நபருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் (Jaffna) - நவாலியில் கடையை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபர் நவாலி பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை தேர்தலுக்கு முதல் நாள் இரவு உடைத்து சிசிடிவி கமரா ஆவணங்களையும் எடுத்து கொள்ளையடித்து சென்றுள்ளார்.
தொடர்ந்து மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் மோதி பசுமாடு பலி
காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் கார் மோதியதில் பசு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு பசு மாட்டுடன் மோதிய நிலையில் கார் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மாடு உயிரிழந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தராத நிலையில், இது குறித்து அங்கு நின்ற பொதுமக்களால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் மாட்டின் உரிமையாளரை அடையாளம் காணாத நிலையில் பிரதேச சபையின் ஊடாக உரிமையாளரை அடையாளம் காண்பதற்காக பிரதேச சபையிடம் பசுமாட்டினை கையளித்தனர்.
தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
