யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாகை - இலங்கை (Sri Lanka) பயணிகள் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது.
நேற்று (16.05.2025) 100வது நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு புறப்பட்ட கப்பலில் 85 பயணிகள் பயணம் செய்தனர்.
சுற்றுலாப் பயணி
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கப்பலில் ஏற்கனவே பயணிகள் 10 கிலோ வரை பயணப்பொதியை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது 22 கிலோ வரை மேலதிகமாக பயணப்பொதியை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
