மகாவலி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது
இவ்வாறு மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி