புதன் வக்ர பெயர்ச்சி - அதிர்ஷ்டத்தின் உச்சத்திலுள்ள 03 ராசியினர்
ஜோதிட சாஸ்திரத்தின் படி புதன் பகவானே ஒருவருக்கு புத்திசாலித்தனம், நுண்ணறிவு மற்றும் திறமைகளை வழங்க வல்லவர் ஆவார். இவர் ஜூலை 25இல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சிம்ம ராசியிலேயே வக்ர பெயர்ச்சி எனும் பின்னோக்கி நகரத் தொடங்கியுள்ளார். புதனின் அமைப்பால் சிலருக்கு வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.
தொழில், வியாபாரத்தில் புதிய உத்தியைப் பயன்படுத்தி வெற்றிகளையும், இலாபத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
செப்டம்பர் 16ம் திகதி வரை வக்ர நிலையிலேயே இருக்கும் புதன் எந்தெந்த ராசிக்கெல்லாம் நன்மைகளைச் செய்வார் என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்வோம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்கு 4ம் ஸ்தானத்தில் புதனின் வக்ர நிலை நிலவுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.
சுகங்கள் அதிகரிக்கும். உங்களின் செல்வ நிலை கூடும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். உங்களுக்கு வர வேண்டிய தடைப்பட்ட பணம் வர வாய்ப்புள்ளது.
உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
தொழிலதிபர்களுக்கு இலாபமும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றம் செய்ய நல்ல நேரம்.
கடக ராசி

கடக ராசிக்கு தன ஸ்தானத்தில் புதனின் வக்ர நிலை அமைகிறது. இதன் காரணமாக உடல் மகிழ்ச்சி, உடல் நலம் மேம்படும்.
ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்க வாய்ப்புகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் உங்களின் திட்டம் நிறைவேறும்.
உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்க சாதகமான நேரமாக இருக்கும்.
துலாம் ராசி

துலாம் ராசியினருக்கு இலாப ஸ்தானத்தில் புதனின் வக்ர நிலை நடக்கிறது. இதனால் உங்களுக்கு மங்களகரமான விடயங்கள் நடக்கும்.
குறிப்பாக தொழிலதிபர்களுக்கு புதனின் அமைப்பால் பெரிய இலாபத்தை எதிர்பார்க்கலாம்.
நீங்கள் புதிய ஒரு தொழில் ஒப்பம் பெற வாய்ப்பு கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். முதலீடு செய்ய சிறந்த நேரமாக இருக்கும்.
குழந்தைகளினால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.