பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பெற்றோர்களுக்கு வெளியான அறிவித்தல்
school
student
parents
health-department
By Sumithiran
இன்று பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில் சளி மற்றும் காய்ச்சல் உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இதுபோன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இருந்தால், அறிகுறிகள் குறைந்த பிறகே அவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் உறுதி எடுக்க வேண்டும் என்றார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள், உதவியாளர்கள், குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவது அவசியம் என்று கூறிய அவர், பிள்ளைகள் பள்ளிகளில் கூடுவதைத் தடுக்க ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி