சீரற்ற வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்
srilankan
meteorological
alert
inclement wether
By Kiruththikan
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை புத்தாண்டு வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்பட்ட 6 வான்கதவுகளில் 4 வான்கதவுகள் அதிக மழைக்காரணமாக தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் உள்ள பகுதிகளில், இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி