மெக்சிகோ தேசிய ராணுவப்படையில் இணைந்த உலகின் மிகச்சிறிய நாய்

Dog Training Mexico World
By Pavi Sep 30, 2026 09:02 AM GMT
Report

மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படை, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ‘கொமாண்டோ’ எனப் பெயரிடப்பட்ட 13 மாத வயதுடைய சிவாவா (Chihuahua) இன நாயை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் 8 அங்குல உயரமும் 15 பவுண்ட் எடையும் கொண்ட கொமாண்டோ, தேசிய பாதுகாப்புப் படையின் சுமார் 350 நாய்களைக் கொண்ட குழுவில் மிகவும் சிறிய நாயாக விளங்குகிறது.

அந்தப் படையில் பெரும்பாலும் ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் லாப்ரடோர் ரெட்ரீவர் போன்ற பணிக்காகப் பயன்படுத்தப்படும் பெரிய இன நாய்களே உள்ளன.

மனைவியை கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்: தீவிர விசாரணையில் காவல்துறை

மனைவியை கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்: தீவிர விசாரணையில் காவல்துறை

தேசிய பாதுகாப்புப் படை

கண்ணாடி, பாதுகாப்பு உடை, தலைக்கவசம் மற்றும் தலையில் பொருத்தப்பட்ட கேமரா ஆகியவற்றுடன் கொமாண்டோ நாய் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

மெக்சிகோ தேசிய ராணுவப்படையில் இணைந்த உலகின் மிகச்சிறிய நாய் | Mexico National Guard Debuts Tiny Chihuahua

மெக்சிகோவின் சிவாவா மாநிலத்தில், அதனை வளர்த்து வந்த வயதான உரிமையாளர்களால் தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் தேசிய பாதுகாப்புப் படையினரால் கொமாண்டோ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் வளர்க்கப்பட்டு வரும் கொமாண்டோ, அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகளுடன் பழகியுள்ளதுடன், அதற்கென தயாரிக்கப்பட்ட உடை மற்றும் காலணிகளையும் அணிந்து வருகிறது.

தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிக்கு முன்னதாக, கொமாண்டோ தேசிய பாதுகாப்புப் படையின் சின்னமாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது. குடிமக்கள் நிகழ்வுகள், பாடசாலை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் அது கலந்துகொண்டுள்ளது.

மெக்சிகோ கடற்படை

மெக்சிகோ சுதந்திர தின அணிவகுப்பிலும் பங்கேற்றுள்ள கொமாண்டோ, சமூக ஊடகங்களிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கொமாண்டோ மிகவும் “புத்திசாலித்தனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள” நாய்களில் ஒன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோ தேசிய ராணுவப்படையில் இணைந்த உலகின் மிகச்சிறிய நாய் | Mexico National Guard Debuts Tiny Chihuahua

பெரிய நாய்கள் மட்டுமே இராணுவப் பணிகளுக்கு பொருத்தமானவை என்ற கருத்துக்கு மாறாக, சிறிய நாய்களாலும் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதை கொமாண்டோ வெளிப்படுத்தி வருகிறது.

மெக்சிகோவில் தேடுதல் மற்றும் மீட்பு நாய்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

மெக்சிகோ கடற்படையில் பணியாற்றிய ஃப்ரிடா என்ற லாப்ரடோர் ரெட்ரீவர், தனது பணிக்காலத்தில் 55 தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றது.

2010ஆம் ஆண்டு ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதன் முதல் நடவடிக்கையில், 12 உயிருடன் இருந்தவர்களையும் 12 சடலங்களையும் கண்டறிய ஃப்ரிடா உதவியிருந்தது.

2017ஆம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களின்போதும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலரை கண்டறிய ஃப்ரிடா உதவியது.

2022ஆம் ஆண்டு உயிரிழந்த ஃப்ரிடாவின் நினைவாக மெக்சிகோவின் பல பகுதிகளில் சிலைகளும் சுவரோவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019