காணாமலாக்கல் சம்பவங்கள்! நீதிமன்றில் கோட்டாபயவிடம் சரமாரி கேள்விகள்

Gotabaya Rajapaksa Sri Lanka Magistrate Court Rajapaksa Family
By Dharu Sep 30, 2026 12:08 AM GMT
Report

அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு நேரில் சென்று, இணையவழி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

சாட்சியமளித்தபோது, நீண்ட காலம் கடந்துள்ளதால் சம்பவங்கள் தொடர்பான பல விடயங்கள் தனக்கு நினைவில் இல்லை என அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இணையவழி சாட்சியமளிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோட்டாபய முன்னிலை

இணையவழி சாட்சியமளிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோட்டாபய முன்னிலை

கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கல்கள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கல்கள் தொடர்பில் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தல்களை வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் கோட்டாபய மறுத்தார்.

தனது பொறுப்பு அரசாங்கத்தால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பதாக மட்டுமே இருந்ததாகவும், களத்தில் இடம்பெற்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தான் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்றும், அனைத்து காணாமல்போகும் சம்பவங்களும் தேசிய பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை என்றும் கோட்டாபய சாட்சியமளித்தார்.

லலித் - குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

லலித் - குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

கீத் நொயார் விவகாரம்

சட்டத்தரணி நுவான் போபகே: ஊடகவியலாளர் கீத் நொயார் உங்களுக்கு நினைவிருக்கிறாரா?

கோட்டாபய : நினைவிருக்கிறது. அந்த சம்பவம் ஓரளவுக்கு நினைவிருக்கிறது. ஆனால் விபரங்கள் நினைவில் இல்லை.

சட்டத்தரணி : “ஓரளவுக்கு நினைவிருக்கிறது” என்று கூறியது எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

கோட்டாபய : ஒரு சம்பவம் இடம்பெற்றது என்பது நினைவிருக்கிறது. ஆனால் அதற்காக நான் இன்று தயாராகி வரவில்லை. அதனால்தான் ஓரளவுக்கு நினைவிருக்கிறது என்று கூறினேன்.

சட்டத்தரணி : கீத் நொயார் காணாமல் போனது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கோட்டாபய : ஐயா, எனக்குத் தெரிந்தவரை கீத் நொயார் காணாமல் போகவில்லை.

சட்டத்தரணி: அவரை சிலர் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியதாக உங்களுக்குத் தெரியுமா?

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!

இப்போது எனக்கு நினைவில்லை

கோட்டாபய : அவர் கடத்தப்பட்டதாக எனக்குத் தெரியாது. ஆனால் அவர் காணாமல் போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக எனக்குத் தெரியும்.

சட்டத்தரணி : அவர் காணாமல் போனதாக உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது நினைவிருக்கிறதா?

கோட்டாபய : அது 15 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். இப்போது எனக்கு நினைவில்லை. தொலைபேசியில் யார் தொடர்புகொண்டார்கள் என்பதும் நினைவில்லை.

சட்டத்தரணி : அப்போது காவல்துறைமா மா அதிபராக இருந்த ஜயந்த விக்ரமரத்னவுக்கு அது தொடர்பில் நீங்கள் அறிவித்தது நினைவிருக்கிறதா?

கோட்டாபய : அப்படியொரு சம்பவம் குறித்து நான் அறிந்திருந்தால், அது தொடர்பில் காவல்துறைமா மா அதிபருக்கு அறிவித்திருப்பேன்.

சட்டத்தரணி : நீங்கள் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தீர்கள். மேஜர் ஜெனரல் ஹெந்தாவிதாரணவுக்கு அது தொடர்பில் அறிவித்தது நினைவிருக்கிறதா?

கோட்டாபய : இது நீண்ட காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். அதனால் தற்போது அது தொடர்பில் எனக்கு நினைவில்லை.

சட்டத்தரணி : கீத் நொயாருக்கு கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், அவரை ஓரிடத்தில் விட்டுச் சென்றதாக உங்களுக்குத் தெரியுமா?

கோட்டாபய : எனக்கு நினைவில்லை, ஐயா.

சட்டத்தரணி: கீத் நொயாரை கடத்திச் சென்று கொலை செய்யாமல் விடுவித்தது உங்கள் உத்தரவின் பேரில்தான் என நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.

வேகமெடுக்கும் லலித்,குகன் வழக்கு : முடுக்கி விடப்படும் விசாரணை

வேகமெடுக்கும் லலித்,குகன் வழக்கு : முடுக்கி விடப்படும் விசாரணை

திருகோணமலை புலனாய்வுப் பிரிவு

கோட்டாபய : அதை நான் மறுக்கிறேன், ஐயா. முதலில் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றதாகக் கூறினேன். அது எவ்வாறு இடம்பெற்றது, யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. மேலும், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கேட்கப்படுவதால் எனக்கு அது நினைவில் இல்லை.

சட்டத்தரணி : 2017 ஜனவரி மாதத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையில், அது தொடர்பில் நீங்கள் பிரதிப் காவல்துறைமா மா அதிபருக்கு அறிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.

கோட்டாபய : அது தொடர்பில் எனக்கு நினைவில்லை.

சட்டத்தரணி : குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் திருகோணமலை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கோட்டாபய : இல்லை, ஐயா. எனக்கு அது தெரியாது.

சட்டத்தரணி: அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த நீங்கள், கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கல்கள் தொடர்பில் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தல்களை வழங்கியதாக நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.

கோட்டாபய : அதை நான் மறுக்கிறேன். நான் களத்தில் இடம்பெற்ற எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பாதுகாப்புச் செயலாளராக எனது கடமை, அரசாங்கத்தால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிப்பதாகும். நான் நேரடியாக கள நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020