நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
ஐபில் தொடரில் இன்று(11) மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
சீசனின் தொடக்கத்தில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருப்பதால் வெற்றி பெறுவது அவசியமாக பார்க்கப்படுகின்றது.
நாணயசுழற்சியில் வெற்றி
முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
மும்பை அணி சார்பாக, ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால் களமிறங்கவுள்ளனர்.
பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி, பாப் டு பிளெசிஸ் , வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் , மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் களமிறங்கவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |