இந்த மாதத்துடன் சிஎஸ்கேவிலிருந்து விலகும் முக்கிய வீரர்: வெளியான காரணம்
ஐபிஎல் தொடர் ஆரம்பமாகியுள்ள நடைபெற்றுவரும் நிலையில், ஏப்ரல் 30ஆம் திகதி முடிந்த உடனே, சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சுப்பர்கிங்ஸ் அணியானது 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் முஷ்தபிசுர் ரஹ்மான் ஏப்ரல் 30ஆம் திகதியுடன் இவ்வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகின்றது.
சிஎஸ்கே அணி
முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரை மட்டுமே, ஐபிஎலில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதியை நீட்டிக்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வங்கதேச அணி, மே 3ஆம் திகதி முதல் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது.
அதன்பிறகு டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி இருப்பதால், முஷ்தபிசுரை ஏப்ரல் 30ஆம் திகதி, நாடு திரும்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விலகும் முக்கிய வீரர்
சிஎஸ்கேவில் முஷ்தபிசுருக்கு மாற்றான வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் இல்லை. ஷர்தூல் தாகூர், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேர் ஆகிய உள்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இவர்களில் ஒருவர்தான், முஷ்தபிசுருக்கு மாற்றாக விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஐபிஎல் 17ஆவது சீசனில் ஏலம்போகாமல் இருக்கும் ஜோஷ் ஹேசில்வுட்டை, முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாக சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. விரைவில், இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
இதற்கு முன்னர் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காக, விசா விண்ணப்பிக்க பங்களாதேஸ் சென்றிருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் சிஎஸ்கே தோற்றது.
எனவே சிஎஸ்கேவிற்கு சிறப்பாக விளையாடியுள்ள முஷ்தபிசுர் ரஹ்மானின் விலகல் சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |