2025 ஐபிஎல் மெகா ஏலம்: வீரர்களை தக்கவைப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், வீரர்களை தக்கவைத்துக்கொள்வது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது பதிப்பு இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 சீசனுக்கான மெகா ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த உள்ளது.
இந்நிலையில் , வீரர்களை தக்கவைத்துக்கொள்வது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மெகா ஏலம்
இதனால், பிசிசிஐ தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆலோசனைகளைக் கேட்க அனைத்து 10 அணிகளின் உரிமையாளர்களையும் ஒரு கூட்டத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி பிசிசிஐ அடுத்த வாரம் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை வீரர்களை தக்கவைப்பது ஒரு முக்கியமானதாகும். எனவே, சில உரிமையாளர்கள் ஏலத்திற்கு முன் சுமார் எட்டு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஆதரவாக உள்ளனர்.
அணியின் நன்மைக்காக குழுவின் பெரும்பகுதியை தக்கவைத்துக்கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிசிசிஐயின் கூட்டம்
கடந்த மெகா ஏலத்தில், நான்கு வீரர்களை மட்டுமே உரிமையாளர்கள் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர் மற்றும் ஒரு வீரரை போட்டிக்கான உரிமை (ஆர்டிஎம்) அட்டையைப் பயன்படுத்தி திரும்ப வாங்க முடியும்.
அதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்களையும் மொத்தம் ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். தற்போது 8 வீரர்களை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
உரிமையாளர்கள் தங்கள் அணிகளை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவதால், பெரிய அளவிலான வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
அதனால் சில எதிர்ப்புகளும் காணப்படும். ஏப்ரல் 16-ம் திகதி நடைபெறும் கூட்டம் இந்த பேச்சு வார்த்தையே சுற்றியே நடைபெறும் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |