மத்திய கிழக்கின் அமைதிக்கு மீண்டும் அச்சுறுத்தல்: ஈரானின் அணு செயற்பாடுகள் தீவிரம்
United States of America
Israel
Iran
World
By Shalini Balachandran
மத்திய கிழக்கை ஒரு யுத்த மேகம் சூழ்ந்து அது மெல்ல விடுபட்டிருக்கும் இந்த நாட்களில் உண்மையில் அந்த யுத்த நிறுத்தம் எந்த நிலையில் இருக்கிறது அது மீறப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா ?
இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்ற வேளை நேற்று (02) செய்மதி மூலம் பெறப்பட்ட படங்களில்,
- அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்ட அணு உற்பத்தி நிலையப்பகுதிகளில் வாகனங்கள் உலாவுவது அவதானிக்கப்பட்டிருப்பதும்,
- யுரேனிய செறிவூட்டலை நிறுத்தப்போவதில்லை என்ற ஈரானின் அறிவித்தலும்,
- அதே நேரம் ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு நிலையத்தின் பணிப்பாளரின் கூற்றுப்படி ஈரான் இன்னமும் அணுகுண்டு தயாருக்கும் நிலையில் இருக்கிறது என்ற வார்த்தைகளும்,
மீண்டும் ஒரு யுத்த சூழலுக்குள் மத்திய கிழக்கை தள்ளப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உலகத்தின் சமாதானப்போக்கு சீர்குலைவிற்கான குறிகாட்டியையே நோக்கி நகருகிறது என்பதனை போரியல் அவதானிப்பாளர்கள் குறிப்பிடுகின்ற நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
