நள்ளிரவில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Laksi
நாடளாவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து இந்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி