மிக் விமான வழக்கின் 3வது சந்தேகநபராக சமல் ராஜபக்சவின் இளைய மகன்
Sri Lanka
Law and Order
By Dharu
மிக் விமான கொடுக்கல் - வாங்கல் வழக்கின் 3ஆவது சந்தேகநபராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான்
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் உள்ள குறித்த சந்தேகநபரை கைது செய்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான சர்வதேச சிவப்பு பிடியானையை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி