நாமல் இன்று கைது செய்யப்படுவார்: பட்டாசுக்களுடன் தயாராகும் ஜே.வி.பி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாரிய மக்கள் பேரணி எவ்வித தடங்களுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் என அந்த கட்சியின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் இன்று (04) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போது, அந்த வளாகத்திற்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமலைகைது செய்தால், நாங்கள் இன்னும் இருமடங்கு மக்களை அனுராதபுரத்திற்கு அழைத்து வருவோம்.
கைது முயற்சி
இந்த கைது முயற்சியின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது.
இந்த வார இறுதியில் ஜனாதிபதிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் அவருக்கு மக்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் கூறவா? அல்லது கோதுமை மா, பால் மாவின் விலையைக் குறைத்ததாகக் கூறவா? சொல்வதற்கு எதுவும் இல்லாததால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என்று கூறி அன்றைய தினம் கைதட்ட வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் கிராம மட்டத்தில் பட்டாசுகளை கொளுத்தி, பதாகைகள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்தி கொண்டாடுமாறு ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தனது கட்சியினருக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் போதும், கட்சி பலமடையும் போதும் இவ்வாறான அழைப்புகளும் அடக்குமுறைகளும் சாதாரணமானவை. இவற்றில் எதனாலும் தங்களது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening