வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் அடாவடி : சி.வி.கே சிவஞானம் விடுத்துள்ள அறிவிப்பு
வடக்கு கிழக்கிலே மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் முத்தையன்கட்டில் இராணுவத்தால் வரவழைக்கப்பட்டு காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை ஒரு சம்பவமாக மட்டும் சுட்டிக்காட்டி எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே இந்த கர்த்தால் அழைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெறுகின்ற காரணத்தினால் இதை ஒரு சுட்டியாக கருதி வடக்கு கிழக்கிலே மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டின் நோக்கமாக நாங்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருந்தோம்.
கர்த்தால் சிலருக்கு அசௌரியமாக இருக்கலாம் குறிப்பாக நாளாந்த உழைப்பாளர்கள், பழுதடைகின்ற பொருட்களை விற்போருக்கு, போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு பாதிப்பாக இருக்கலாம்.
ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழரசுக்கட்சி இந்த கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒற்றுமையாக நமது கோரிக்கையினை காட்ட வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூட இராணுவம் பெரிய முகாம்களுக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற ஒரு நிபந்தனை இருந்தது ஆனால் அது இதுவரை நிகழவில்லை அதிலும் மோசமான ஒரு விஸ்தரிப்புகள் நடைபெறுகின்றது.
நாங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுடைய எதிர்ப்பினை காட்டுவது மட்டுமல்ல இராணுவம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலக வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே இந்த கர்த்தாலின் அடிப்படை நோக்கம்.
இராணுவம் மேற்கொள்கின்ற தாக்குதல்கள்
அதேநேரம் இராணுவம் பல இடங்களிலே மேற்கொள்கின்ற இவ்வாறான தாக்குதல்கள், அடாவடித்தனங்களை தடுப்பதற்கு கர்த்தாலை உதாரணமாக காட்டுவதே நோக்கமாகும்.
எனவே எதிர்வரும் 18ஆம் திகதி கர்த்தாலுக்கு அழைப்பு விடுகின்றோம். அனேகமாக பகல்வேளை என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது குறிப்பாக நான்கு மணியுடன் நிறைவு பெறும்.
இந்த கர்த்தால் வெற்றிகரமானதாக அமைய அனைவரும் ஒத்துழைத்து பெரிய முகாம்களுக்கு இராணுவத்தினரை அனுப்பி மக்கள் குடியிருப்பில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு இந்த அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே நாங்கள் இந்த கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம்.
அரசியலுக்கு அப்பால் ஒரு பொதுவான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என கோரி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
