இராணுவப் புலனாய்வு துறையின் முக்கிய அதிகாரிகள் மீது அநுரவின் அதிரடி முடிவு

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Mar 09, 2025 11:15 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தற்போது அநுர அரசாட்சியில் பாரிய பேசுப்பொருளுக்குரிய விடயமாக மாறியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை படிப்படியாக ஆரவாரமின்றி மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில், கடந்த காலத்தில் இராணுவப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் புத்திக மஹதன்தில, பதவியில் இருந்து அகற்றப்பட்டு எதுவித பொறுப்புகளும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, பிரிகேடியர் பிரபோத சிறிவர்த்தன, புலனாய்வுத்துறையில் இருந்து இராணுவ பான்ட் வாத்திய இசைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் புலனாய்வுத்துறையில் இருந்த இன்னொரு பிரிகேடியர் ஷிரான் அமித், தற்போதைக்கு புனர்வாழ்வு செயற்பாட்டுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு பிரிகேடியர் பிரியலால், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் பிரிகேடியர் குமார புலனாய்வுப் பிரிவில் இருந்து ஒதுக்கப்பட்டு இராணுவ தலைமையக செயற்திட்ட பிரிவில் வெறுமனே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் நுவன் அபேசேகர, இசுருபாய செயற்திட்ட அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுத்துறையில் சிரேஷ்ட கேணல் தரத்தில் இருந்த அதிகாரிகளான சேனக முதுகுமாரண கொத்தலாவலை பயிற்சிக் கல்லூரிக்கும், கெளும் மத்துமகே பொறுப்புகள் இன்றியும், கேணல் முஹம்மத் அன்சார் புத்தளைக்கும், கேணல் புளத்வத்த முல்லைத்தீவுக்கும், கேணல் சாகர கொஸ்தா கிளிநொச்சிக்கும், கேணல் ஜயந்த ஷெல்டன் ஹம்பாந்தோட்டைக்கும் மற்றும் கேணல் முஹம்மத் இக்ராம் இராணுவ ஆய்வுப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக இராணுவப் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், இது குறித்த பிண்ணனியை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,


இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிணையில் விடுவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிணையில் விடுவிப்பு

கொழும்பில் போட்டியிடவில்லை - பின்வாங்கியது தமிழரசுக்கட்சி : சுமந்திரன் அறிவிப்பு

கொழும்பில் போட்டியிடவில்லை - பின்வாங்கியது தமிழரசுக்கட்சி : சுமந்திரன் அறிவிப்பு

காசா விற்பனைக்கு அல்ல...! ட்ரம்ப்பின் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பலஸ்தீனர்கள்

காசா விற்பனைக்கு அல்ல...! ட்ரம்ப்பின் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பலஸ்தீனர்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026