வடமராட்சியில் மீனவர் மீது இராணுவ புலனாய்வாளர்கள் கடும் தாக்குதல்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்றையதினம் இராணுவ புலனாய்வாளர்களால் மீனவர் ஒருவர் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
நேற்றைய தினம் (20/122021) கடலிற்கு சென்றவேளை கடலில் இந்திய இழுவை படகுகளால் 17 வலைகளை இழந்த நிலையில் அவற்றை தேடியும் கிடைக்காததால் சில மணிநேரம் காலதாமதமாக பிறபகல் 2:45 மணியளவில் கரைவந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணை செய்துவிட்டு சென்றுள்ள நிலையில் இன்று முற்பகல் 11:00 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு என கூறி குறித்த மீனவர் அழைக்கப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலிற்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த 34 வயதுடைய ஞானப்பிரகாசம் ராஜ்குமார் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.