சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய இராணுவ பின்னணி! உடைக்கப்படும் பிள்ளையானின் நகர்வுகள்
உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியான சஹ்ரானுடன் இணைந்திருந்த இராணுவ ஜெனரல்களுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் இருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரத்தியோக இணைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
பெயர் விபரங்கள்
இப்போது அவற்றை சொல்வது என்றால் எனக்கு எதிராக வழக்கு தொடர்வார்கள். அதற்காக காலத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.
அது தொடர்பில் பெயர் விபரங்களை, நான் குறிப்பிட்டால் அவர்களின் அவமானத்தை துடைப்பதற்கு வழக்கு தாக்கல் செய்யலாம்.
இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சூழ்ச்சி செய்யப்பட்டமை உண்மையாகும். புலனாய்வுத் துறையினர் முக்கியமானவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பகுதிகளில்
இராணுவத்தில் உள்ள ஜெனரல் சிலர் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் சிலர் கிழக்குப் பகுதிகளில் கடுமையாற்றி உள்ளனர். மேலும், சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கவும் குறித்த ஜெனரல்மார்களே சம்பந்தப்பட்டிருந்தனர்.
சஹ்ரான் என்ற பெயரையும் அந்தக் குழுவையும் வளர்த்தவர்கள் அவர்களே. இதற்கமைய தாக்குதலின் பின்னர் அதற்கான பிரதி பலன்களை அனுபவித்தனர்.
கோட்டாபய வெற்றி பெற்ற பின்னர் உயர் பதவிகளில் அவர்கள் அமர்த்தப்பட்டனர். நான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 60 பக்கங்கள் கொண்ட தனி அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

