படையினர் வசமுள்ள காணிகள் : திலகநாதன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
இராணுவம் (Army) மற்றும் கடற்படையின் (Navy) ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் (S.Thilaganathan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைத்ததன் பின்னர் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களை படிப்படியாக எமது அரசாங்கம் விடுவித்து வருகின்றது.
பொதுமக்களிடம் கோரிக்கை
கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளையும் எமது அரசாங்கம் விடுவித்து இருந்தது.
கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விரங்களை சேகரித்து இருந்தது.
எனவே அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்கள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பான விபரங்களை எமக்கு தந்துதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறான இடங்களை மிக விரைவில் விடுவித்து மக்களுடைய பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |