வடகிழக்கில் இராணுவத்தின் அடாவடி : ஹர்த்தாலுக்கு மனோ கணேசன் ஆதரவு

Sri Lanka Army Sri Lankan Tamils Mullaitivu Mano Ganeshan ITAK
By Sathangani Aug 11, 2025 11:05 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (15) முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட நபர் மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் 15ஆம் திகதி ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில், ”கடந்த 7ஆம் திகதி ஐந்து தமிழ் இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

முத்துஐயன் கட்டுக்கு விரைந்த தமிழரசுக்கட்சி! கண்டனங்களை வெளிப்படுத்தி இறுதி அஞ்சலி

முத்துஐயன் கட்டுக்கு விரைந்த தமிழரசுக்கட்சி! கண்டனங்களை வெளிப்படுத்தி இறுதி அஞ்சலி

குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

வடகிழக்கில் இராணுவத்தின் அடாவடி : ஹர்த்தாலுக்கு மனோ கணேசன் ஆதரவு | Military Presence In The North East Should Reduce

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை நாம் ஆதரிக்கிறோம்.

ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்லப்போகும் செய்தி.

அநுர அரசாங்கத்திலும் தொடரும் தமிழர் மீதான இராணுவ அடக்குமுறை

அநுர அரசாங்கத்திலும் தொடரும் தமிழர் மீதான இராணுவ அடக்குமுறை

இன அடிப்படையிலான போர்

போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.

வடகிழக்கில் இராணுவத்தின் அடாவடி : ஹர்த்தாலுக்கு மனோ கணேசன் ஆதரவு | Military Presence In The North East Should Reduce

எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில் அநுரகுமார திசாநாயக்க ஈடுபடுத்த வேண்டும்.

இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்துக் கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் மூட வேண்டும்.

அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம். அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம்.

வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது“ என குறிப்பிட்டுள்ளார். 

மன்னார் வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட யாழ்.இளைஞன்

மன்னார் வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட யாழ்.இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மன்னார், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி