யாழ் குடாநாட்டில் திடீரென அதிகரித்த இராணுவ பிரசன்னம்
இராணுவத் தளபதி விஜயம்
சிறிலங்கா இராணுவத் தளபதி விக்கும் லியனனே இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், யாழ் குடாநாட்டில் இராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்ற விக்கும் லியனனே முதன்முறையாக இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டதுடன், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர அவரை வரவேற்றுள்ளார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணம், பலாலி சந்திப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையத்தை விக்கும் லியனகே இன்று திறந்து வைத்தார்.
இனங்களுக்கு இடையில் நல்லிண மையம்
சிறிலங்கா இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் காரணமாக யாழ் - பருத்தித்துறை பிரதான வீதியில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளிலும் விக்கும் லியனகே இன்று பங்கேற்றிருந்தார்.

