பால்மாவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Milk Powder Price in Sri Lanka
Milk
Economy of Sri Lanka
By Kathirpriya
பால்மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் (22) வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் அறிவிக்கப்பட்டது.
வரி அதிகரிப்பு
இதனால் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பால்மா இறக்குமதியாளர் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
