பாவனைக்கு தகுதியற்ற பால்மா விற்பனை - மில்கோ நிறுவனத்திற்கு எதிராக விசாரணையை ஆரம்பித்தது விவசாய அமைச்சு!
Sri Lanka
Milk
Ministry of Agriculture
By Pakirathan
மனித பாவனைக்கு பொருத்தமற்ற 635 மெட்ரிக் பால்மாவை மில்கோ நிறுவனம் எந்தவொரு அனுமதியுமின்றி கால்நடைத் தீவனத்திற்காக நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாய அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பால்மாவை விற்பனை செய்ய வேண்டாம் என விவசாய அமைச்சு உத்தரவிட்டிருந்தபோதிலும், அதனை மீறி மில்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பணிப்பாளர் சபையின் அனுமதியின் மூலம், குறித்த பால்மாவை பிறிதொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறும் விவசாய அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் மில்கோ நிறுவன தலைவருக்கு அறிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி