இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு சுமார் 5,100 இந்திய (India) கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் சுமார் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயரும் கோடீஸ்வரர்கள்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியா, கோடீஸ்வரர்களின் புலம்பெயர்வு அடிப்படையில் உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சீனா (China) மற்றும் இங்கிலாந்து (England) ஆகிய நாடுகள் இந்த வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது.
இந்தியா இப்போது சீனாவை முந்தி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.
புதிய கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் இருந்து கோடீஸ்வரர்கள் புலம்பெயர்வது சீனாவை விட 30 வீதத்திற்கும் குறைவாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை இழக்கும் அதேவேளை, பலர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் சவுதி அரேபியா (Saudi Arabia) தொடர்ந்து உயர் வகுப்பினர் விரும்பும் நாடாக இருந்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்களை விட அதிகமாக புதிய கோடீஸ்வரர்களை அந்த நாடு உருவாக்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |