வெளிநாடொன்றில் 1400 கோடி ரூபா முதலீடு: முத்தையா முரளிதரனின் அடுத்தகட்ட நகர்வு
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்(Muttiah Muralitharan) இந்தியாவின்(India) கர்நாடக(Karnataka) மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா பணத்தினை முதலீடு செய்யவுள்ளதாக கர்நாடக பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பாடானாகுப்பியின் சமாராஜனாகரா மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள மென்பான உற்பத்தி நிறுவனமொன்றினை நிறுவும் நோக்கில் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1400 கோடி ரூபா முதலீடு
இந்த திட்டம் குறித்து முரளிதரனுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ள அவர், முத்தையா மென்பானம் மற்றும் இனிப்புப் பண்டங்கள் என்ற பண்டக்குறியின் பெயரில் இந்த தொழிற்சாலையில் உற்பத்திகள் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் இந்த உற்பத்திச்சாலை 230 கோடி ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகள் 2025 ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்