கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு
Lottery
Canada
Money
By Jaso
கனடாவில் லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் எவரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது.
ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை கேட்பாரற்று உள்ளது. பரிசு தொகைக்காக யாரும் இன்னும் உரிமை கோரவில்லை.
உரிமை கோரப்படாத பரிசுத் தொகை

லொட்டரி பரிசு வென்றவர்கள் தங்கள் பரிசைப் பெற 52 வாரங்கள் வரை அவகாசம் உள்ளது.
2022ல் இதுவரையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லொட்டோ 6/49 ல் $101 மில்லியனுக்கும் அதிகமாக பரிசை பலரும் வென்றுள்ளனர்.
தற்போது $5 மில்லியன் பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் எப்போது வாங்கப்பட்டது என்ற விபரமும் தெரியவில்லை.
மரண அறிவித்தல்