வடக்கில் லொட்டரியில் வென்ற அதிஷ்டசாலிகளுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்
அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்பட்டுவரும் அதிஷ்டஇலாப சீட்டிழுப்பில் கடந்த இரண்டு மாதங்களில் வட மாகாணத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில் நேற்று (07) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி தவகோகுலன், கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் இந்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கில் அதிஷ்டசாலிகள்
இதன்படி மன்னார் மாவட்டத்தில் சனிதா ரிக்கற்றின் மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை மற்றும் பளை பிரதேசத்தில் வலம்புரி அதிஷ்ட ரிக்கற் மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு 20 இலட்சம் காசோலை மற்றும் சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா மன்னார் பிரதேசங்களில் சனிதா, அதோடிபதி, கப்ருக்க அதிஷ்ட ரிக்கட் ஊடாக வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் காசோலைகளும் ஆளுநர் ஜீவன் தியாகராசா அவர்களால் வழங்கப்பட்டது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
