இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்..!
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை (2023) விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,536.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
கடந்த ஆண்டில் (2023) இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 1,432.2 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் கிடைத்த வருமானம் 1,025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |