இனரீதியாக மக்களை பிளவுபடுத்தாதீர் :கனேடிய தூதுவரிடம் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்து

Colombo Canada Ramalingam Chandrasekar
By Sumithiran May 21, 2025 02:39 PM GMT
Report

மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாமென, கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் சந்திரசேகர் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

 கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் இன்று (21) கொழும்பிலுள்ள அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

 வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் 

உயர் ஸ்தானிகரை வரவேற்ற அமைச்சர் சந்திரசேகர், இலங்கையின் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமாக வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடினார்.

இனரீதியாக மக்களை பிளவுபடுத்தாதீர் :கனேடிய தூதுவரிடம் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்து | Mini Chandrasekhar S Request Canada Ambassador

 அபிவிருத்தியில் பின்தங்கிய சமூகமாக வாழும் வடக்கு மக்களின் நிலை குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 30 வருட கால யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு மக்கள் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக வலியுறுத்தினார். கடந்த கால அரசுகள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்ததாகவும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஊழல், மோசடி மற்றும் இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

முள்ளிவாய்க்காலில் பிரம்ப்டன் மேயருக்காக காட்சிப்படுத்தப்பட்ட பதாகை

முள்ளிவாய்க்காலில் பிரம்ப்டன் மேயருக்காக காட்சிப்படுத்தப்பட்ட பதாகை

 வன்னியில் அதிகரிக்கும் பெண்களின் விபரீத முடிவுகள்

வடக்கில் உள்ள பல சமூகங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும், 40% பேர் இன்னும் தற்காலிக கொட்டில்களில் வசிப்பதாகவும் அமைச்சர் விளக்கினார். பெற்றோரை இழந்த பிள்ளைகள், விதவைகள் மற்றும் பல முதியோர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 60% மக்கள் கடன்பட்டு வாழ்வதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த பெரும் சிரமங்களை அனுபவிப்பதாகவும், வன்னிப் பிரதேசத்தில் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இனரீதியாக மக்களை பிளவுபடுத்தாதீர் :கனேடிய தூதுவரிடம் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்து | Mini Chandrasekhar S Request Canada Ambassador

கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சர் சந்திரசேகர் கலந்துரையாடினார். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கு மற்றும் தெற்கு மீனவர்கள் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தமது தொழிலில் ஈடுபட்ட ஒரு காலம் இருந்ததாகவும், ஆனால் பாகுபாடு அரசியல் இலங்கையில் இனவாதத்தை வளர்த்து தேசிய ஒற்றுமையைச் சீர்குலைத்ததாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

சீன அரச அதிகாரிகளுக்கு அதிரடியாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

சீன அரச அதிகாரிகளுக்கு அதிரடியாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது 

நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். எந்த வடிவத்திலும் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாக அறிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார். மக்களை மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இனரீதியாக மக்களை பிளவுபடுத்தாதீர் :கனேடிய தூதுவரிடம் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்து | Mini Chandrasekhar S Request Canada Ambassador

கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின் முழு ஆதரவை வழங்குவதாகக் கூறினார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய மக்கள் சக்தி பெற்ற வலுவான மக்கள் ஆணையை அவர் குறிப்பாகப் பாராட்டினார். இந்த முயற்சிகளுக்கு கனடாவின் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தினார். புதிய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளதாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையையும் அவர் பாராட்டினார்.

இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளர், கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜீனதாச, பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

வடக்கில் தமிழரின் காணிகள் சுவீகரிப்பு ..! அமைச்சர் பிமல் வெளியிட்ட தகவல்

வடக்கில் தமிழரின் காணிகள் சுவீகரிப்பு ..! அமைச்சர் பிமல் வெளியிட்ட தகவல்

குறிப்பாக, கடல் அட்டை(Sea cucumber) வளர்ப்பு மையங்களை நிறுவுவதற்கும், தனியார்-பொதுப் பங்காளித்துவங்களை ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் இந்தத் திட்டங்களுக்கான நிதி நிறுவனங்களைக் கண்டறிவதற்கு கனடாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது என செயலாளர் வலியுறுத்தினார். மேலும், கடல் அட்டை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், களு கங்கை நீர்த்தேக்கத்தில் புதிய மீன் வளர்ப்புத் திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுமாறும் அவர் கோரினார்.

 உயர் ஸ்தானிகரின் வாக்குறுதி

கனடாவின் வலுவான மீன்பிடித்துறையையும், மேம்பட்ட மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தையும் முன்னிலைப்படுத்திய உயர் ஸ்தானிகர் வால்ஷ், எதிர்காலத்தில் இந்தத் துறைகள் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இனரீதியாக மக்களை பிளவுபடுத்தாதீர் :கனேடிய தூதுவரிடம் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்து | Mini Chandrasekhar S Request Canada Ambassador

இச்சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் பற்றிக் பிக்கரிங், மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜீனதாச ஆகியோர் கலந்து கொண்டனர்.

மின்சார திருத்த சட்டமூலம் : வெளியானது வர்த்தமானி

மின்சார திருத்த சட்டமூலம் : வெளியானது வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019