கனடாவில் விமான விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் 8 மற்றும் 2 விமானிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்தானது, கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில், இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி)
மீட்பு நடவடிக்கை
இந்நிலையில், விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடன் செயற்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துடன், விபத்தினால் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தானது, விமானத்தை தரையிறக்குவதற்கு தாயாராகும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |