புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னேற்ற நடவடிக்கை
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் சர்தானா மற்றும் திட்ட நிர்வாகக் குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (12) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இதனால் ஏற்படும் சவால்கள், திட்ட வரைபடம் மற்றும் திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம்(2024) டிசம்பருக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு
Progress of the 500 MW Renewable Energy Project in Mannar & Pooneryn was discussed with Anil Sardana, MD & CEO of Adani Transmission Ltd & project management team, this morning at the Ministry of Power & Energy. We discussed the challenges, road map & timeline for the project… pic.twitter.com/3y2PVyFMtP
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 12, 2023