மீண்டும் செயற்படத் தொடங்கவுள்ள சபுகஸ்கந்த! வெளியானது அறிவிப்பு
கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இன்று(13) இலங்கையை வந்தடையும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்று இரவு 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த மாதிரிகளை நாளை பரிசோதிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
A 100,000 MT Crude Oil cargo will arrive in Colombo later tonight & will undergo quality sampling tomorrow. A 2nd Crude Oil Cargo of 120,000 MT is scheduled to arrive 23rd-29th of August. Both cargos are Russian Urals Crude Oil. Refinery to commence operations by mid next week.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 13, 2022
இரண்டாவது கப்பல்
மேலும், 120,000 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டாவது கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிக்கிடையில் நாட்டை வந்தைடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சபுகஸ்கந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
