விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி (புதிய இணைப்பு)
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் கெஹலியவிற்கு விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (2) கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கெஹலிய நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றையதினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மருந்து இறக்குமதி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று(02) அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம்
அங்கு அவரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று (02) கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படுவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |