மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்தும் மணல் விவகாரம்! உடனடியாக அறிக்கை கோரிய அமைச்சர் மஹிந்த
Mahinda Amaraweera
SriLanka
Batticallo
By Chanakyan
குளங்களில் மண்ணை அகழ்ந்து கிழக்கு மாகாணத்தில் களப்பு நிரப்பப்படும் நடவடிக்கை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் புறித்த அறிக்கையினைக் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த சில பகுதிகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டில் களப்பு நிரப்பப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் இலங்கையில் மணலை கொண்டு சென்று மாலை தீவில் தீவு ஒன்று உருவாக்கப்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.