பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
G.C.E.(A/L) Examination
By Sumithiran
2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவடையவுள்ள உயர்தர பரீட்சை
அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்களின் கொடுப்பனவு
இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி