இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய பிரதமர் - பதவி விலகிய பிரெக்ஸிட் அமைச்சர்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) கடந்த வாரம் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன் விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் புரோஸ்ட் (David Frost) நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
போரிஸ் ஜோன்சனின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் அதை பொருட்படுத்தாத பிரதமர் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறார். இந்நிலையில் அந்த புதிய உத்தரவின்படி இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற நெரிசலான இடங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.
டேவிட் புரோஸ்ட் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.