இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இதன் போது இலங்கை கைத்தொழில் துறை தொடர்பான முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த காலங்களில் விமல் வீரவங்ச கடும் இந்திய எதிர்ப்பு கொள்கையில் செயற்பட்டு வந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது அதற்கு எதிராக கறுப்பு கொடிகளை ஏற்றுமாறு கோரி இருந்தார். இவ்வாறான நிலையில், இந்திய உயர்ஸ்தானிகருடனான இந்த சந்திப்பு முக்கிய விடயம் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்
.
Productive discussions with Industries Minister Hon'ble @weerawansa_w for enhancing ????cooperation in industrial sectors with special emphasis on priority areas for #SriLanka, such as manufacturing. pic.twitter.com/5RJgk8nExg
— India in Sri Lanka (@IndiainSL) February 24, 2022
