நாட்டைவிட்டு வெளியேற தயாராகும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
srilanka
ministers
m.ps
leaving
By Sumithiran
பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற உள்ளவர்களில் அரசியலில் விரக்தியடைந்த ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலர் இருப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்படி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நாடாளுமன்ற விடுமுறைக்கு விண்ணப்பித்து அனுமதி கிடைத்ததை அடுத்து மூன்று மாத கால விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார்.
அமைச்சின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
இதேவேளை, பதவிகள் கிடைக்காமல் விரக்தியடைந்துள்ள மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலில் இருந்து விலகி வெளிநாடு செல்லவுள்ளதாக தமது நண்பர்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி