ஹரின்,மனுஷ அமைச்சு பதவிகளிலிருந்து விலகினர்
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட இவர்கள் இருவரும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சுப்பதவியை பெற்றிருந்தனர்.
தற்போது அரச தலைவர் கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலககோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில் இருவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.