எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!
அனைத்து அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளனர் என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
எரிசக்தி நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில், அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த கருத்தை எட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்களின் இந்த முடிவைத் தொடர்ந்து, அமைச்சகச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டைக் கணிசமான அளவில் குறைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற பயணங்கள்
இதேவேளை, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தன அபயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், எரிசக்தியைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, உச்ச நேரங்களில் (மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 8 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்