வெளிநாடுகளுக்கு பறக்க தயார் நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
வருட இறுதி விடுமுறையை களிக்கும் வகையில் சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு பறக்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து,அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் மற்றும் படிக்கும் தமது பிள்ளைகளைப் பார்ப்பதற்கு, விடுமுறை நாட்களில் அந்த நாடுகளுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நுவரெலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெனரல் ஹவுஸ் என்ற விடுதியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது விடுமுறையை களிக்க திட்டமிட்டுள்ளனர்.