ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வெளியான சுற்றறிக்கை
மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education)சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்கவினால் இன்றையதினம் (21.12.2024) இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தனியார் வகுப்பு
இதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களிடம் மேலதிக வகுப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் வகுப்புகளில் கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை நேரங்களுக்கு பின்னர் அல்லது வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெவ்வேறு பகுதிகளில் வைத்து பணத்தை அறவிட்டு தங்களது பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக இந்த சுற்றறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை, பின்பற்றாத ஆசிரியர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அது குறித்து சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |