இஸ்ரேல் தலைநகரை அதிர செய்த ஹவுதிகளின் பலிஸ்டிக் ஏவுகணை!
யெமனில் இருந்து வந்து சனிக்கிழமை அதிகாலை டெல் அவிவ்-ஜாஃபா பகுதியில் விழுந்த ஏவுகணையை இடைமறிக்கத் தவறியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த தாக்குதல் காரணமாக 14 பேர் லேசான காயம் அடைந்ததாக இஸ்ரேலிய மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.
ஈரானுடன் இணைந்த ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர், அவர்கள் ஒரு பலிஸ்டிக் ஏவுகணை மூலம் ஜாஃபா பகுதியில் "இராணுவ இலக்கை" தாக்கியதாகக் கூறியுள்ளார்.
பதில் தாக்குதல்
இந்த நிலையில், சிறு காயங்களுடன் 14 பேருக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையாக செயல்படும் வகையில் ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிராக யேமனின் சில பகுதிகளை கைப்பற்றி, யேமன் குழுவிற்கு எதிராக இஸ்ரேலும் பதில் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |