மினுவாங்கொடை – மஹகம பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka
By Vanan
மினுவாங்கொடை – மஹகம பகுதியில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் சோதனை நடத்தியிருந்தனர்.
துப்பாக்கிச் சூடு

சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்ட போது, அவர் T56 ரக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் பதிலுக்கு தாக்கியதில் சந்தேக நபர் காயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் விசேட அதிரடிப்படையின் காவல்துறை உத்தியோத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி