எத்தனை அதிகாரிகள் வந்தும் கண்டுக்கொள்ளபடாத திருகோணமலை பேருந்து நிலையம்
திருகோணமலை நகரமென்பது நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் சிறு நகரங்களை கொண்டு இயங்கும் வர்த்தக அமைவிடமாக காணப்படுகிறது.
இங்குள்ளவர்கள் திருகோணமலை நகருக்கு வருகைத்தந்துதான் வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை காணப்படுவதால் மக்கள் அதிகமாக வந்து செல்லும் நகரமாக காணப்படுகிறது.
அத்தோடு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகைத்தரும் நகரமாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் நாளாந்தம் பரபரப்பாக காணப்படும் திருகோணமலை நகரின் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் பேருந்து பயணிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, மணிக்கணக்காக காத்திருந்து பேருந்தில் செல்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆராய்ந்த ஜபிசி தமிழ் ஊடகத்திடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது...
[4QPCJ2S ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |