பிரபாகரன் தொடர்பில் தவறான தகவல் - நெடுமாறன் மீது பாயும் கண்டனம்
LTTE Leader
Velupillai Prabhakaran
Sonnalum Kuttram
Pazha Nedumaran
By Sumithiran
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பழ.நெடுமாறன் தவறான தகவல்களை பரப்புவதாக தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
மறைந்து வாழும் பழக்கம் பிரபாகரனுக்கு கிடையாது
“மறைந்து வாழும் பழக்கம் பிரபாகரனுக்கு கிடையாது. பழ. நெடுமாறன் கூறிய கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன். பிரபாகரன் தொடர்பாக பழ. நெடுமாறன் கூறியிருப்பது தவறான முன் உதாரணம்.
மக்களிடையே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதற்கு என்ன காரணம்? என அவர் பதில்சொல்ல வேண்டும். பிரபாகரன் மாவீரன், மறைந்து வாழும் தலைவர் அல்ல.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது தவறான கருத்து
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வது தவறான ஒன்று என்பது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கருத்து” என்று குறிப்பிட்டார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்