மதிப்புமிக்க பட்டத்தை சுவீகரித்துக் கொண்ட அமெரிக்க வாழ் இலங்கையர்
Sri Lanka
United States of America
By Mathu
அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் மிஸ் கலிபோர்னியா டீன் யு.எஸ்.ஏ 2023 (Miss Teen USA 2023) எனும் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார்.
இவரே இந்த மதிப்புமிக்க பட்டத்தை சுவீகரித்துக் கொண்ட முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் ஆவார்.

இவருடனான சந்திப்பு தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
"நான் புதிய மிஸ் கலிபோர்னியா டீன் தாலியா பீரிஸை சந்தித்தேன், கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் தாலியா அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உறவுகளை உருவாக்க தனது தளத்தை பயன்படுத்துகிறார்.
அவர் எங்கள் அமெரிக்க மையத்தில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தினார் என்றும்" பதிவிட்டிருந்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி