அந்தமானில் ஏவுகணை சோதனை - விமானங்கள் பறக்கத் தடை
அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது.
சமீபத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து பொலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது
விமானங்கள் பறக்க தடை
தற்போது, இந்திய முப்படைகளின் உத்தரவின் பேரில், அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது.
இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீற்றர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மே 16ம் திகதி விமானப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் (23) , நாளையும் ( 24) அந்தமானில் எந்த சிவிலியன் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
