ட்ரம்ப் கொடுத்த அதிரடி மிரட்டல்: ஈரான் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விடுத்த மிரட்டலுக்கு ஈரான் பகிரங்கமாக பதில் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளைகுடா நாடான ஈரான் இரகசிய அணு ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இது குறித்து ஈரான் தங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை
இதையடுத்து, ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் குண்டு வீசி தாக்குவோம் என்றும் அவர்கள் இதற்கு முன்பு கண்டிராத வகையில் இந்த தாக்குதல் இருக்கும் எனவும் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஈரான் தனது செயல்பாடுகள் மூலம் அமெரிக்காவை எச்சரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் பதில் எச்சரிக்கை
அந்தவகையில், ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானின் குறிவைத்து தாக்கும் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், வான்வழி தாக்குதலை முறியடிக்கும் அமைப்பையும் ஈரான் முடக்கியுள்ளது.
அதன்படி, இந்த ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளமை உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி! 19 மணி நேரம் முன்
